போக்குவரத்து துறையில் 16ஆ‌யிரம் பணியாளர்கள் : முதல்வர் ஜெ.,


சென்னை : போக்குவரத்து துறையில் புதிதாக 16 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: போக்குவரத்து துறையில் நடப்பு ஆண்டில் 16,661‌ பேர் நியமிக்கப்பட உள்ளனர்; 6910 டிரைவர்கள், 7402 கன்டெக்டர்கள் மற்றும் 2349 தொழிலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்; 2010-11 ம் ஆண்டு வரை 2316 பென்சன்தாரர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படும்; ரூ.47 கோடி பென்சன் நிலுவை தொகை மே மாதமே வழங்கப்படும்; அனைத்து அரசு பேருந்துகளிலும் எலக்ட்ரானிக் பயண சீட்டு வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 400 தொழில்நுட்ப பணியிடங்கள் நிரப்பப்படும்.9157பதிலிப்பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவர். ஸ்ரீரங்கம ‌தேனி,திண்டுக்கல் காரைக்குடி , கரூர். ஈரோடு ஓசூர் ஆகிய இடங்களில் பணி மனைகள் ஏற்படுத்தப்படும் 45 வயதுக்குட்பட்ட டிரைவர்களுக்கு உடல்பரி‌சோதனை நடத்தப்படும். என தெரிவித்துள்ளார். 339
சர்க்கரை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு:சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊ‌திய உயர்வு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தென்னிந்திய சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் அமைப்பின் ஒப்பந்தப்படி நிலுவை தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு 10 சதவீதம் நிலுவைத் தொகை வழங்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதிய ஊதியத்தில் 25 சதவீதம் சிறப்பு ஊதியமாக 2012ம் ஆண்டின் ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment