தீபாவ‌ளி: 6,859 ‌சிற‌ப்பு பேரு‌ந்துக‌ள் - த‌மிழக அரசு

தீபாவ‌ளி ப‌ண்டிகையொ‌ட்டி 6,859 ‌சிற‌ப்பு பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று போ‌க்குவர‌த்து‌த் துறை அமை‌ச்ச‌ர் செ‌ந்‌தி‌ல் பாலா‌ஜி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக இ‌ன்று அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

முதலமைச்ச‌ரி‌ன் மேலான உத்தரவுப்படி, தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்கு ஏதுவாக, அனைத்து அரசு போக்கு வரத்துக் கழகங்களின் சார்பிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர்பேருந்து நிலையத்தில் இருந்து இம்மாதம் 9ஆம் தேதி 768 பேருந்துகளும், 10ஆம் தேதி 633 பேருந்துகளும், 11ஆம் தேதி 543 பேருந்துகளும, 12ஆம் தேதி 884 பேருந்துகளும இயக்கப்பட உள்ளன.

அதேபோல், சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 9ஆம் தேதி 925 பேருந்துகளும, 10ம் தேதி 940 பேருந்துகளும், 11ம் தேதி 977 பேருந்துகளும், 12ம் தேதி 1189 பேருந்துகளும், ஆக மொத்தம் 9ஆ‌ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 6,859 ‌சிற‌ப்புப் பேருந்துகள் இயக்கப்பபட உள்ளன. அவ்வாறே, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

300 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்லும் ‌ிறப்புப் பேருந்துகளுக்கு இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையில், www.tnstc.in‌ -‌ல்பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இம்மாதம் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னையின் இதர பகுதிகளில் இருந்து தியாகராயநகர் பகுதிக்கும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கும் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலக தோலைபேசி எண். 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எ‌ன்று அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் செ‌‌ந்‌தி‌ல் பாலா‌ஜி கு‌றி‌‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

2 comments:

  1. You have to for all instance be in a Nepal Bhutan Tibet tour that you can position your way explore and arbitrator the course to go. Make it a point to go up with a entwined cable at all times and travel in great set so you can for all time depend on a superstar if no matter which goes mistaken.

    ReplyDelete